நீர் சறுக்கல் படகுகளை (surfing board) ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

 



சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற  பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை (surfing board)  ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று புதன்கிழமை (28) இடம்பெற்றது.

 அறுகம்பை ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினால் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் அறுகம்பை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டு, பேரணியாக பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்றனர்.