செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 


2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 1355 பரீட்சை மத்திய நிலையங்களில் செயன்முறைப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.