கதிர்காம யாத்திரை சென்று திரும்பிய கெப் வண்டி விபத்துக்குள்ளானதில் 05 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


கதிர்காம யாத்திரை சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டியொன்று வேககக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.