கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கி சூடு 100 பேர் காயம் 4 பேர் உயிரிழப்பு

 


அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில், கிரெட்னா அவன்யூ பகுதியில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதுடன், இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், குறித்த கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இருப்பினும் தாக்குதல் நடத்திய நபர் தப்பிச்சென்ற நிலையில், அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.