மட்டக்களப்பு கல்லடி மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் கடந்த சில
தினங்களுக்கு முன்னர் திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும்
மடிக்கணினி உட்பட சுமார் 13 இலட்சம் பெறுமதியான பொருட்களை இன்று
காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த 18ம் திகதி இடம் பெற்ற திருட்டு தொடர்பாக காத்தான்குடி
பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ்
நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ரஹீம் தலைமையில்
மேற் கொண்ட விசாரணைகளையடுத்து ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் வைத்து
குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து, இரண்டு மோட்டார் சைக்கிள்கள்,
மடிக்கணினி, டி.வி.டி.பிளயர் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தும் சாதனங்கள்
என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஆரையம்பதி மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கொள்ளைக் கோஸ்டியாக இயங்கி வந்ததாகவும்
காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது
செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.