மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவையொட்டி, ஒழுங்கமைப்பு குழு தலைவராக செயலாற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் தலைமையில் ஊடக சந்திப்பொன்று புனித மிக்கேல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.
150 வது ஆண்டு நிறைவையொட்டி புனித மிக்கேல் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரால் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன ..
அதனடிப்படையில் ஆரம்ப கட்டமாக சிவானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதான பாடசாலைகளுக்கிடையே கடினப் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது .இந்த சுற்றுப் போட்டியில் நான்கு பிரதான பாடசாலைகளின் பழையமாணவர்கள் முதல் தடையாக பங்குபற்ற உள்ளது குறிப்பிட்ட தக்கது
மேலும் 150 வது வருட நிறைவினையொட்டி தபால் திணைக்களத்தினால் தபால் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது