கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட 15 வயதுடைய மாணவி அப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார்.
குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையின் அலைபேசியை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அதிபரிடம் அகப்பட்டு மாணவி மனவேதனை அடைந்துள்ள நிலையில், இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.