அப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் இரண்டு வண்ணங்களில் வெளியாக இருக்கிறது. ஏப்பிள் நிறுவனம் iPhone 15 சீரிஸுக்கு இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
iPhone 15 Pro க்கு அடர் சிவப்பு நிறம் மற்றும் iPhone 15 மற்றும் 15 Plus க்கு ஒரு பச்சை நிறம் என்று Gizmochina தெரிவித்துள்ளது.
iPhone 15 Proக்கான புதிய சிவப்பு நிறம் "கிரிம்சன்" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ரோவின் ஆழமான ஊதா நிறத்தை விட சற்று இலகுவாக இருக்கும்.
இருப்பினும், iPhone 15 மற்றும் 15 Plusக்கான பச்சை நிறம் iPhone 12 மற்றும் iPhone 11 ஆகியவற்றின் பச்சை நிறத்தைப் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸின் வெளியீட்டு திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால் இது இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.