17. வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்

 


கொழும்பு தெமட்டகொட பகுதியில் 17 வயதான சிறுமி காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

தனது வீட்டிலிருந்து சென்ற குறித்த சிறுமியே காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியிலேயே சிறுமி காணாமல் போயுள்ளார்.

காணாமல்போன சிறுமி தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் (077-3715446 -0761611667) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.