நாட்டில் நாளொன்றுக்கு 189 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்படுவதுடன் நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை 5ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 50ஆயிரத்து 264 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படடுள்ளது.
நாடு முழுவதும் தற்போது மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில், பொதுமக்கள் டெங்கு நுளம்பு பெருகும் அபாயமுள்ள இடங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள 43 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்தவகையில், கடந்த ஜனவரி முதல் ஜூலை 05ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் நாடுமுழுவதும் 50ஆயிரத்து 264 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.