2023ம் ஆண்டிற்கான அரச பல்கலைக்கழகங்களின் 14வது விளையாட்டு விழா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தலைமையின் கீழ் இம்முறை இடம்பெறவுள்ளது.
விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப விழா செப்ரம்பர் 1ஆம் திகதி கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமையில்
நடைபெறவுள்ளது.
செப்ரம்பர் 8ஆம் திகதி நடைபெறும் நிறைவு விழாவில் ஜனாதிபதி கௌரவ
ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது
விளையாட்டுப் போட்டியை சிறப்பிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிக்கான
பாடல், விளையாட்டுப் போட்டியின் இலட்சனை, போட்டியின் மகுடவாசகம் மற்றும்
இணையதளம் ஆகியன நேற்றைய தினம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம்
செய்து வைக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
பீடாதிபதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.