கொக்குவில்- சத்துருகொண்டான்- தன்னாமுனை வீதியானது இன்று காலை 2023.07.12 கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது .

 























 கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின்   மேற்பார்வையின்  கீழ்  புனரமைக்கப்பட்ட  கொக்குவில்- சத்துருகொண்டான்- தன்னாமுனை வீதியானது இன்று காலை 2023.07.12  கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது .
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வடக்கு பிரதேச  செயலாளர் வாசுதேவன் , மற்றும் அரச அதிகாரிகள் உட்பட  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந்தன் அவர்களும் கலந்து கொண்டார் .
அதன் பின்னர் சின்ன ஊரணி மாவடிப்பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற விசேட பூஜையிலும் ஆளுநர் கலந்து கொண்டதோடு  அங்கு வருகை தந்த மக்களோடு கலந்துரையாடி அவர்களின் அன்றாட பிரச்சினைகளையும்   கேட்டறிந்து கொண்டார் , பொது மக்களால் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார் .