மட்டக்களப்பு கொத்துக்குள ஸ்ரீ மாரி அம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி .2023.07.22

  சிவா முருகன்


 

















கிழக்கிலங்கையில்  வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு  ஊரணியில் அமையப்பெற்ற     கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குடப்   பவனி இன்று காலை  2023.07.22- சனிக்கிழமை  சிறப்பாக இடம்பெற்றது.

 மட்டக்களப்பு ஆணைப்பந்தி சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து, விநாயகர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகி விசேட கும்ப பூஜைகள்  இடம் பெற்ற பின்னர்    பாற்குட பவனியானது  ஆயிரத்துக்கு மேட்பட்ட பெண் பக்த அடியார்கள் மஞ்சள் நிற கலாச்சார உடை அணிந்து அரோகரா   கோஷத்துடன்  மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியூடாக மாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.