ஷிவா முருகன்
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் இரண்டாம் நாள் கண்காட்சி நிகழ்வுக்கு பெருமளவான பொது மக்கள் கண்காட்சியை பார்வையிட வந்திருந்தனர்.
பாடசாலையின் அதிபர் நிதாஞ்சலி அவர்களின் தலைமையில் விஞ்ஞானக் கண்காட்சி நேற்றைய தினம் ஆரம்பமாகியதோடு கண்காட்சிக்கு பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது .
இன்றைய தினம் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுக்கு அதிதிகளாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், அருட்தந்தையர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பழைய மாணவர்கள், மாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கண்காட்சியை சிறப்பித்தனர்