விரித்தி விழா 2023 - சிவில் சமூக வெளிகளை வலுப்படுத்தும் நிகழ்வு .

     




























 இலங்கை - UNOPS விரித்தி வலையமைப்பின்
சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கிழக்கு
மாகாண சமூகங்களுக்கு  இடையே     சிவில் சமூக நிறுவனங்களின் பங்களிப்புக்களை
வெளிப்படுத்தும் வகையில்  2023 ஜூலை 29 முதல் 30 வரை  கிழக்கு
மட்டக்களப்பில் முதல் விரித்தி விழா இந்து கல்லூரி  மைதானத்தில்     முன்னெடுக்கக்ப்பட்டது .
விரித்தி  என்பது இலங்கையில் உள்ள சிவில் சமூக அமைப்புகளுக்கிடையேயான
வலையமை ப்பு,  ஒத்துழைப்பு   மற்றும் ஆதரவிற்காக உருவாக்கப்பட்ட ஒரு
தளமாகும்.  புவியியல் அமைவிடம்,  ஆர்வமுள்ள பகுதிகள் மற்றும்  பகிரப்பட்ட
மதிப்புகள்  ஆகியவற்றின் அடிப்படையில்  சிவில் சமூகங்களுக்கு   இடையேயான    ஒத்துழைப்பை    செயல்படுத்துவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதை விரித்தி   நோக்கமாக  கொண்டுள்ளது .

   கிழக்கு மாகாணத்தில் சிவில்  சமூகத்தின்
தாக்கமானது,  மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி  முயற்சிகள்  மூலம்  சமூக
சேவையில் கவனம் செலுத்தும் வகையிலான ஈடுபாடு  மற்றும்  சேவை
வடிவிலேயே  காணப்படுகின்றது.
தொடரும் இந்தக் கூட்டுறவை நினைவு  கூறும்  வகையில்,   விரித்தி விழா 2023 ஆம்    ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை
மட்டக்களப்பில்  இந்து கல்லூரி  மைதானத்தில்    நடை   சிறப்பாக  நடை பெற்றது .

      விரித்தி வலையமைப்பின் உறுப்பினர்கள்      மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பங்கேற்புடன் தற்போது   மேற்கொள்ளப்பட்டு   வரும் பணிகளை   இவ்விழா வெளிப்படுத்தியது .
 இப்பொது   நிகழ்வானது,    பார்வையாளர்களுக்கு    சிவில் சமூகத்தைச் சேர்ந்த    பங்கேற்பாளர்களிடமிருந்து  கற்றுக்கொள்ளவும் , விரித்தி வலையமைப்புடன் இணையவும்     வாய்ப்பளிக்கின்றது.
 
  இவ்விழாவில் குழுக்கலந்துரையாடல்கள், உள்ளூர்க் கலைஞர்களின் கலை கலாச்சார  நிகழ்வுகள் இடம் பெற்றன .    மேலும்   கைவினைப் பொருட்கள் ,  சிறு தானிய  உற்பத்தி பொருட்கள் , ஓவியங்கள்,  புகைப்படங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டமை   குறிப்பிடத்தக்கது