சீமெந்து மூடையின் புதிய விலை 2,300 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது

 


சீமெந்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, 50 கிலோகிராம் எடை கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாயால் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, தற்போது சந்தையில் ரூ.2,600 க்கு விற்பனை செய்யப்படும் சீமெந்து மூடையின் புதிய விலை 2,300 ரூபாயாக குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்..