ஓப்போ ஸ்மார்ட்போன் விளம்பரத்தில் நடிக்க எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு ரூ. 30 கோடி சம்பளம்.

 


 

ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.

அப்படத்திற்காக முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் ராஜமௌலி மீது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஓப்போ ஸ்மார்ட்போன் விளம்பரத்தில் நடிக்கவும் அந்த நிறுவனத்தின் இந்திய விளம்பர அம்பாசிடராக ஓராண்டு செயல்படவும் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு ரூ. 30 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.