ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பில் உள்வாங்கப்பட்ட 32 பேருக்கு மட்டக்களப்பில் நிரந்திர நியமனம்!!

 









ஒரு இலட்சம் வேலை வழங்கும் அரச கொள்கைத்திட்டத்தின் கீழ் பல்நோக்கு அபிவிருத்தி அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு அரச அலுவலங்களில் பயிலுணர்களாக பணியாற்றிவந்தவர்களுக்கு மட்டக்களப்பில் நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றிவந்த குறித்த பயிலுனர்கள் 32 பேருக்கும் அலுவலக உதவியாளர் சேவையின் தரம் (3) இன் பதவிக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பத்மராஜாவினால் இன்று (04) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
கடந்த 3 வருட கால பல்நோக்கு அபிவிருத்தி அலுவலக உதவியாளர்களாக கடமை யாற்றியவர்களுக்கே இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் புதிதாக நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் நேர்மையாகவும் நீதியாகவும் கடமைகளை செய்வதுடன் அரச விஸ்வாசியாக செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்ககொண்டார்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன் உட்பட மாவட்டச் செயலக நிர்வாகக்கிளை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.