தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவு தினம், அனுஷ்டிக்கப்பட்டது.

 


இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவு தினம், வியாழக்கிழமை (13) அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழர்களின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த அ.அமிர்தலிங்கம் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு தினம் வலி மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள அவரது உருவச் சிலையடியில் இடம் பெற்றது.

இதன்போது அமரரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.