சதொச விற்பனை நிலையங்களில் 35 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும்.

 


இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் 35 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்திற்குள் இந்தச் செயல்முறையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு நாளைக்கு 100,000 முட்டைகளை சந்தைக்கு வெளியிட எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.