கடந்த ஏழு மாதங்களில் சட்டவிரோத மின்கம்பிகளால் 36 யானைகள்
பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.விவசாய
நிலங்களையும் மனித உயிர்களையும் காக்க வனவிலங்கு திணைக்களமும் மின்சார
வேலிகளை உருவாக்கினாலும் அது சரியான தொழில்நுட்ப முறைப்படியே
மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அறிவியல்பூர்வமற்ற முறையில் போடப்பட்டுள்ள அங்கீகாரமற்ற மின்கம்பிகளே யானைகளின் த உயிரிழப்புகளுக்குக் காரணம். வனவிலங்கு
திணைக்களம் சட்டவிரோதமாக மின்கம்பிகளை இடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை
அமுல்படுத்துகிறது. எனினும் சட்டவிரோதமாக மின்கம்பிகள் தொடர்ந்தும்
அமைக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்,