வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று (31) காலை சென்றடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.