காதலியிடம் இருந்து மகனை மீட்டுத் தருமாறு கோரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று பிற்பகல் கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 5000 ரூபாய் பணத்தினை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.