மசாஜ் நிலையமொன்றில் வைத்து 58 வயதான கனேடிய பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு.

 


எல்ல பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையமொன்றில் வைத்து 58 வயதான கனேடிய பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சிகிச்சையாளர் ஒருவர் நேற்று முன்தினம் (12) காலை கைது செய்யப்பட்டதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுமுறைக்காக இந்நாட்டுக்கு வந்துள்ள இந்த வெளிநாட்டுப் பெண் எல்ல பிரதேசத்திற்கு விஜயம் செய்த நிலையில் எல்ல-பசரா சாலையில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்றார். அங்கு மசாஜ் செய்து கொண்டிருந்த போது சிகிச்சையாளர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக எல்ல காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். 

 அதன்படி சந்தேக நபரை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கையை காவல்துறையினர் ஆரம்பித்திருந்த நிலையிலேயே 34 வயதுடைய சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.