இந்த ஆண்டு போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது 78 ஆயிரத்து 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

 


நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த 15ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது 78 ஆயிரத்து 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, 32 ஆயிரத்து 334 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 389 கிலோ 721 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 32 ஆயிரத்து 361 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட 34 ஆயிரத்து 709 சோதனை நடவடிக்கைகளில் 5 ஆயிரத்து 654 கிலோகிராம் கஞ்சாவுடன், 34ஆயிரத்து 486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களுடன் 11 ஆயிரத்து 322 பேர் குறித்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.