மட்டக்களப்பில் சிறுபோக வேளான்மை நெற்கதிர்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கான காரணத்தினைக் கண்டறிய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வேண்டுகோளின் பேரில் வத்தளைகொட நெல் ஆராய்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் செவ்வாய்கிழமை (04) விஜயம் செய்து களப்பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவுக்கும் நெல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கமிடையிலான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நெற்கதிர்களின் பாதிப்பிற்கு அதிகளவான வெப்பத்தின் தாக்கம் ஒரு காரணியாக இருப்பதை கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரசாயன பசளை பாவனை தொடர்பாகவும் நிலத்திற்கு தேவையான நூண்பசளைகளை பரிசோதனை செய்து குறைபாடான பசளைகளை இட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியதுடன் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினை தமது தலைமையகத்திற்கு அறிக்கையிடுவதாக நிபுணர்கள் இதன் போது தெரிவித்தனர்.
இதுதவிர தெற்றுக்களில் இருந்து பாதுகாக்க வயல் நிலங்களை முறையாக பண்படுத்துதல்இ அறிமுகம் செய்யப்பட்ட புதிய நெல் இனங்களை பயிரிடுதல்இ வயல் நிலங்களில் உள்ள மண்ணினை பரிசோதனை மேற்கொண்டு பரிந்துரை செய்யப்பட்ட இரசாயன பசளைகளைப் பயன்படுத்துவதனூடாக அதிகளவான விளைச்சளை பெற்றுக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கே. ஜெகன்நாத்இ விவசாய விரிவாக்கல் திணைக்கள பிராந்தியப் பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜாஇ கமநல அமைப்பின் பிரதிநிதிகள்இ கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.