ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய
சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் (
கருணா அம்மான்) இடையிலான விசேடசந்திப்பு நேற்று காலை ஜனாதிபதியில்லத்தில்
இன்று நடைபெற்றது.
இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பிலும் ,
எமது புலம்பெயர்ந்த உறவுகள் எமது மண்ணில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி
நடவடிக்கைகளுக்கும், முதலீடுகளுக்கும் இடையூறாக இருக்கும் விடயங்கள்
தொடர்பிலும் விரிவாக ஆரயப்பட்டதாகவும் , அதேவேளை இவ்விடையம் தொடர்பில்
முனைப்புடன் செயற்படுமாறும் தேவை ஏற்படும் போது நேரடியாக தன்னை அணுகுமாறும்
கருணா அம்மானிடம் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் கருணா அம்மானின் இணைப்புச்
செயலாளர் டானியல் கௌதமன் தெரிவித்தார். இச் சந்திப்பின்போது கட்சியின்
முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.