வரலாற்றிலேயே கடந்த ஜூன் மாதம் தான் அதிக வெப்பமான மாதம் என நாசா தெரிவித்துள்ளது.

 


வரலாற்றிலேயே கடந்த ஜூன் மாதம் தான் அதிக வெப்பமான மாதம் என நாசா தெரிவித்துள்ளது.

தற்போது எல்நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், ஜூன் 2023-க்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 ஜூன் வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

 மேலும், நாசா தனது அறிக்கையில் மனித நடவடிக்ககைளினாலும், குறிப்பாக கார்பனீராக்சைடு அதிகமாக வெளியிடுவதனாலும் இவ்வாறு உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.