மட்டக்களப்பில் புதிதாக மூன்று மதுபானசாலைகள் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியை நிறுத்துமாறு வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

 


 மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில், புதிதாக மூன்று மதுபானசாலைகள் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியை
நிறுத்துமாறு வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரக்கட்சியின் வவுணதீவு கிளையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
கலந்துகொண்டதோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,
மண்முனை மேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மதுபானசாலைக்கு எதிராக கோசங்கள் எழுப்பட்டதுடன் மதுபானசாலை அமைக்கும் எண்ணத்தையே கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும்
முன்வைக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்களுடன் கலந்துரையாடியதுடன்
குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதிகோரப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பினை காரணம்காட்டி அதற்கான அனுமதி
வழங்கப்படவில்லையெனவும் மக்கள் எதிர்ப்புகள் இருந்தால் அவ்வாறான விடயங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும்
தெரிவித்தார்.