வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கமாக, மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதிபரின் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் தொடர்பில் வாரந்தோறும் மீளாய்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.