அரசியல் செய்து கொண்டிருக்காமல் செயற்பாட்டு ரீதியான அரசியலை ஜதார்த்தபூர்வமான அரசியலை கிழக்கு தமிழர்களை பாதுகாப்பதற்கான அரசியலை நாங்கள் முன்னெடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
அரசடித்தீவில் பல வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று வீதி அபிவிருத்தி
அதிகாரசபையினால் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மிக மோசமான முறையில் மக்கள் பயன்படுத்தமுடியாத நிலையிலிருந்த சுமார்
இரண்டரைக்கிலோமீற்றர் வீதியானது சுமார் 60மில்லியன் ரூபா செலவில்
புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முன்னெடுத்த முயற்சியினால் இந்த வீதிகளுக்கான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டு புனரமைப்புகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஜே.முரளி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு பணிகளை ஆரம்பித்துவைத்தார். நிகழ்வில் முன்னாள் பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.