பாக்கு நீரினையை நீந்திக் கடந்து சாதனை புரிந்த இளம் மாணவன் தவேந்திரன் மதுஷிகன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கௌரவிக்கப்பட்டார் .

 

 



 




































 SHIVA MURUGAN

 தமிழ்நாட்டின் தனுஸ்கோடி கரையில் இருந்து  இலங்கை - தலைமன்னார் வரையிலான  31 கிலோமீட்டர் நீளம் கொண்ட   பாக்கு நீரிணையை   12-மணித்தியாலங்களில்  நீந்தி கடந்து  சாதனை புரிந்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன் (வயது 19) அவர்களுக்கு   மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில்  மட்டக்களப்பு செயலகத்தில் 2023.07.26திகதி  நினைவுச் சின்னம்  மற்றும்    நிதி அன்பளிப்பும்  வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது .