திருகோணமலை இருந்து இன்று அதிகாலை மட்டக்களப்பு நோக்கி வருகை தந்த தனியார் பஸ் சாரதி புகையிலை அதிகமாக பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தியதாக சொல்லப்படுகிறது.
மூன்று தடவைகளுக்கு மேல் பஸ் வீதியை விட்டு விலகி சென்றுள்ளது . பாதுகாப்பற்ற தன்மையினை உணர்ந்த பிரயாணிகள் சாரதியை பஸ்ஸில் இருந்து இறக்கியதாக தெரியவந்துள்ளது .
பயணிகளின் உயிரோடு விளையாடும் இவரை போன்ற பொறுப்பற்ற சாரதிகளின் செயல்களால் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது .
பஸ் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி பொது மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். .