வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் பணத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்திற்கு தீர்வைக் காணவேண்டும்

 


உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடக்கும் என பொதுமக்கள் மத்தியில் காணப்படும் அச்சங்களை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் என பொருளாதார நிபுணரானரும் வெரிட்டே ஆராய்ச்சி நிறுவகத்தின் நிறைவேற்று இயக்குநருமான கலாநிதி நிசான் டி மெல் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் தேவையற்றது. வங்கியில் உள்ள வைப்புகளிற்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்திற்கு தீர்வைக் காணவேண்டும் என தெரிவித்துள்ள அவர் வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டு மக்கள் தங்கள் பணத்தை மீளபெற்றுக்கொள்ள முயலும் சூழ்நிலை உருவாக அனுமதிக்கக் கூடாது.

அவ்வாறான ஒரு நிலை தோன்றுமாயின்  அது வங்கிகளை கடுமையாக பாதிக்கும். அப்போது வங்கிகள் வீழ்ச்சியவதால் ஏற்படும் பாதிப்பை யாராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அந்நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை உடனடியாக பெற்றுக்கொள்ள முயல்வார்கள். அவ்வாறான தருணத்தைக்  கையாள்வது கடினம். அவ்வாறான சூழ்நிலையை நாங்கள் உருவாக்கமலிருப்பது அவசியம் எனவும் நிசான் டி மெல் தெரிவித்துள்ளார்.

வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை. அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.