ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பல வழிகளில் நாம் போராடுகின்றோம்- ஜே.வி.பி

 


ஆட்சியை நாம் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் பொருளாதாரப் பிரச்சினை தீரவில்லை. அதிகாரம் உள்ள வர்க்கம் அதிகாரம் அற்ற வர்க்கத்தை நிர்வகித்துக் கொண்டு செல்கின்றது. அவர்களைக் கஷ்டத்தில் தள்ளியுள்ளது.

அந்த மக்கள் வாழ்வதற்காகப் போராடுகின்றார்கள். அவர்களை நாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். அந்த மக்களின் பிரச்சினை தீர வேண்டுமென்றால் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.

 அந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பல வழிகளில் நாம் போராடுகின்றோம். ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்.