டான் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் போட்டிகளை அட்டவணை படுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு வெபர் அரங்கில் இடம்பெற்றது.

 


மட்டக்களப்பு டான் தொலைக்காட்சி நிறுவனம் நடாத்தும் மட்டு டான் கிண்ணம் 2023ஆம் ஆண்டிற்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்
போட்டிகளை அட்டவணை படுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு வெபர் அரங்கில் இடம்பெற்றது.


எதிர்வரும் 8,ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 30 ஆம் திகதி வரை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட உதை பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன்
மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் மற்றும் படுவாங்கரை உதைப்பாந்தாட்ட சங்கங்களில் பதிவு செய்யப்பட்ட 32 கழகங்களுக்கிடையில் இடம்பெறவுள்ள
உதைப் பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் அட்டவணை படுத்தும் நிகழ்வு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி குழு தலைவர் உதயராஜ் தலைமையில் இடம்பெற்றது.


நிகழ்வில் உதைப் பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் காந்தன், டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலக முகாமையாளர் அனன்சியா அவுட்ஸ்கோன்,
உட்பட கழகப் பிரதிநிதிகள் போட்டிகளில் பங்குபெற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.