வட மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

 


வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம் இன்று இடம்பெறும் கண்டன போராட்டத்தில் வட மாகாணத்தின் அனைத்து சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.