பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய தேவாலயத்தின் பொறுப்பதிகாரி நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சி .

 


சுமார் ஒரு வருட காலமாக பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவரை அவ்வப்போது பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாரவில காவல் பிரிவிற்குட்பட்ட கத்தோலிக்க தேவாலயத்தின் பொறுப்பதிகாரி ஒருவரை கைது செய்ய மாரவில தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யத் தேடப்படும் சந்தேகத்திற்குரிய அருட் தந்தை தலைமறைவாக உள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

 கைது செய்ய தேடப்பட்டு வரும் இந்த சந்தேகத்திற்குரிய அருட்தந்தை நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.