மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது.

 


மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா நேற்று மாலை பாடசாலை அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.


விழாவில் மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, கலையாழி சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. முப்பெரும் விழாவில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு,
கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கொள்கை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அடுத்த வருடம் கல்வித்துறைக்கு பாரிய நிதி யொதுக்கீடு வழங்கப்படுமென்றும் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் கே. சித்திரவேல், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். குலேந்திரகுமார் என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.