மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் 107 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆலயமான
மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய வருடாந்த திருவிழா
பங்குதந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய திருவிழாவின் கூட்டுத் திருப்பலி எதிர்வரும் 06 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை காலை அருட்தந்தை அன்ரனி றொபட் எஸ் ஜெ.அடிகளாரின் தலைமையில்
ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறவுள்ளது.
ஆலய திருவிழா நவநாள் காலங்களில் விசேட திருப்பலிகள் இடம்பெற்று, எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்
பொன்னையா
ஜோசப் ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அத்திருப்பலியில்
மாணவர்களுக்கு முதன் நன்மை, உறுதி பூசுதல், அருள் அடையாளங்கள்
வழங்கப்படவுள்ளதுடன் மாலை புனிதரின் திருச்சொரூப பவனியும் இடம்பெறவுள்ளது.