ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பட்டிபளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(29) அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் மாபெரும் நடமாடும் சேவை இடம்பெற்றது.
இதன் போது பதிவாளர் கிளையின் சேவைகள், அடையாள அட்டை வழங்கும்
சேவைகள், காணி தொடர்பான சேவைகள், சமூர்த்தி மற்றும் கிராம சேவகர்
தொடர்பான சேவைகள், ஆயுர்வேத மருத்துவம் , ஏனைய மருத்துவ சேவைகள் என்பன
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.