மயக்க மருந்தால் நோயாளிகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 


இலங்கையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மயக்க மருந்தால் நோயாளிகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொழும்பில் 23 வயதுடைய யுவதி ஒருவர் மயக்க மருந்து செலுத்திய நிலையில் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அவருக்கு குறித்த மயக்க மருந்து செலுத்தியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் சம்பவித்ததாக மருத்துவ தரப்பால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் மயக்க மருந்து செலுத்திய நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தச் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், இந்த மரணம் கடந்த 28ஆம் திகதி நிகழ்ந்ததாக தெரிவித்தார். 

 உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மரணம் தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளியின் அக்குளில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு மயக்க ஊசி செலுத்தியும் சுயநினைவு வராமல் அவர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.