தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இருப்பதால், இருதரப்பு உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதாகவும் செந்தில் தொண்டமான் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தார்.