அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேற்று பிற்பகல் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இருவரது உடல்களும் ஒரே சவப்பெட்டியில் ஒன்றாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்நது.
படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றதுடன், உடல் உறுப்புகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைத்தார்.
அத்துடன், விலங்குகள் கடித்ததால் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த இருவரும் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார். (a)
Comments - 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .