இலங்கையில் யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்து செல்வதின் காரணம் என்ன ?

 


கடந்த வருடத்தில் மாத்திரம் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த பத்தாண்டுகளில் ஒரு வருடத்தில் பதிவான அதிக யானை உயிரிழப்புகளின் எண்ணிக்கை இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை தொடருமானால், இலங்கையில் காட்டு யானையைக் கண்டறிவது அரிதான நிகழ்வாகிவிடும் என கலாநிதி ரவீந்திர காரியவசம் மேலும் தெரிவித்தார்.