மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் காணி சம்பந்தமான நடமாடும் சேவை ஒன்று முன்னெடுக்கப்பட்டது .



 




 SHIVA MURUGAN 

 
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அரசாங்க காணிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருக்கும் காணிப் பிணக்குகளை தீர்க்கும் முகமாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் காணி சம்பந்தமான நடமாடும் சேவை ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற  மாவட்ட அபிவிருத்திக் குழுவில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்திற்கு அமைவாக  கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் இன்று 2023.07.13-ம்  திகதி பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடை பெற்றது .


கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.எம்.ஆர்.சி.தசநாயக்க அவர்கள்  இதில் பங்கு  பற்றி இருந்தார் .     48 கிராம சேவையாளர் பிரிவைச்     சேர்ந்த   பெருமளவான பொது மக்கள்  ஆர்வமுடன் வருகை தந்திருந்தனர்
 காணிப் பிணக்குகளுக்கு   சம்பந்தப்பட்ட   அதிகாரிகளினால் இயலுமானவரை தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன .