மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
திக்கோடையில், கிழக்கு மாகாண சுகாதார,சுதேச அமைச்சினால் அமைக்கப்பட்ட
ஆயுர்வேத
மத்திய மருந்தகம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் மாகாண விசேட செயற்பாடுக்காக
குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில், சுமார் 13 மில்லியன் ரூபா
செலவில் இந்த மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு
மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் திருமதி டாக்டர்
ஆர்.சிறிதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக,
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வில்
இராஜாங்க அமைச்சர்களான சந்திரகாந்தன், வியாழேந்திரன், முன்னாள் மாகாணசபை
உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை, பிரசாந்தன், கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போரதீவுப்பற்று
பிரதேச மக்கள் நீண்டகாலமாக விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில், இந்த
ஆயுர்வேத வைத்தியசாலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.