மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான பிரமோற்சவ பெருவிழா

 


 மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான பிரமோற்சவ பெருவிழாவில் முதல் முறையாக தேரோட்டம் 2.7.2023 இடம்பெற்றது.
பிரமோற்சவ பெருவிழா ஆலய பிரதம குரு சைவ சிரோன் மணி விஷ்ணு பூஜா நவக்கிரக பூஜா துரந்தரர் சிவஸ்ரீ சாட்சிநாதக் தெய் வேந்திரக் குருக்கள் தலைமையில்
பிரமோற்சவ கிரிகைகளுடன், பிரம்மோற்ச பிரதம குரு கற்குழி வவுனியா தேவி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ குக அரவிந்த குருக்கள் தலைமையில் கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன்
பெருவிழா ஆரம்பமாகி தேவஸ்தானத்தின் தேரோட்ட பெருவிழா முதல் முறையாக இன்று இடம்பெற்றதுடன் தேரோட்ட திருவிழாவினை வந்தாறுமூலை பெரிய பரமக்குடி மக்களினால் சிறப்பிக்கப்பட்டது.
இன்று இரவு சுவாமி வெளி வீதி உலா வருதலுடன் உரியடி திருவிழா இடம் பெற்று தீமிதிப்புடன் தீர்த்தோற்சவம் அதிகாலை கழுவன்கேணி இந்து சமுத்திரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.