மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேச்தில் இரண்டு நாளில் பூட்டியிருந்த இரு வீடுகளை திருடர்கள் உடைத்து, அங்கிருந்து 8 இலச்சம் ரூபாய் பெறுமதியான 5 பவுண் தங்க நகைகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர் எம்.ஜி.பி.எம்.எம்.ஜெசூலி முகமட் தெரிவித்தர்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று முன்தினம் புதன்கிழமை குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவரும் அவரது 3 வயது குழந்தையும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் ஒருவரின் மரணவீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டின் கூரையை கழற்றி உள்நுழைந்த திருடன், அங்கிருந்து கைசெயின், மோதிரம் 3 மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளான்.
அதேவேளை, வெல்லாவெனி கமலநல சேவைகள் திணைக்களத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றின் உரிமையானரான பெண் ஒருவர், சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை காலை வேலைக்கு சென்று மதிய உணவிற்காக ஒரு மணியளவில் வீடு தரும்பியுள்ளார்.
அப்புட்டியிருந்த வீட்டை உடைத்து அங்கிருந்த 4 பவுண் கொண்ட நெக்கிலஸ் தங்க ஆபரணத்தை திருடன் திருடிச் சென்றுள்ளான்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தடவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுத்துவருவதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.