மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளினால் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லிக்கான
நிர்ணய விலையாக 120 ரூபாவினை பெற்று தருமாறு கோரிக்கையினை முன்வைத்து,
இன்றைய
தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் தற்காலிகமாக
முன்னெடுக்கப்படவிருந்த சுழற்சி முறையிலான உண்ணா விரத போராட்டம் கிழக்கு
மாகாண
ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய
உறுதிமொழிக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள்
தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்
இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்ற நிலையில், மாவட்ட செயலகம் முன்னாள்
ஒன்று கூடிய மாவட்ட விவசாய
அமைப்புகளின் உறுப்பினர்கள், கிழக்கு மாகாண
ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் , மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்
சிவநேசத்துரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற
உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன்,
மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது
இது தொடர்பாக மாவட்ட விவசாயிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.